Wednesday, March 16, 2022

சிவனே

என்ன தருவேன் நான்

என்ன தருவேன் சிவனே (2)


என்னிடம் ஏதுமில்லை

என்று நினைத்தாயோ சிவனே... (2)



உன்னிடம் இல்லையென்று

என்னிடம் தேடினாயோ

உன்னைவிட்டு எங்கு சென்றேன் என்று நினைத்து நீ


என்ன தருவேன் நான்

என்ன தருவேன் சிவனே (2)


நீயின்றி நானுமில்லை

நானின்றி நீயாஇல்லை

சிவனே....சிவனே


என்னிடம் நானுமில்லை

உன்னிடம் சேரவில்லை

உன்னைவிட்டால் யாருமில்லை


என்ன தருவேன் நான்

என்ன தருவேன்  சிவனே (2)

என்னையன்றி.... நான்

என்ன தருவேன் சிவனே (2)




 





No comments:

Post a Comment